சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – ஒரு சவரன் ரூ.35,664க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 35,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
கடந்த வருடம் வருடம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக தொழில்துறை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் கணிசமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதே போல் வெள்ளி விலையும் உயருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் 4,458 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசுக்கு அவகாசம்!
மேலும் தங்கம் ஒரு பவுனுக்கு 240 அதிகரித்து 35,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு மாதம் 6ம் தேதி முதல் தங்கம், வெள்ளியின் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.35,000 என்ற விலையில் விற்கப்பட்டது. இது மேலும் குறைய வேண்டும் என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலவரப்படியே உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 68,600க்கும் விற்பனையாகிறது. அமெரிக்க டாலரின் நிலையை பொறுத்து வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பங்கு சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்தால் வெள்ளி விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.