
இன்றைக்கும் ஷாக்.. சாமானியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தங்கம்.. சவரன் ரூ.43,000ஐ நெருங்கும் அபாயம்!
சென்னையில் இன்று (07.02.2023) 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து 5,373-க்கு விற்கப்படுகிறது.
அதிகரிக்கும் விலை:
தங்கம் விலை முன் எப்பொழுதும் இல்லாத வகையில் குறிப்பாக 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து வலுவாக அதிகரித்தது. அந்த மாதம் முதல் பல பண்டிகைகள் தொடர்ந்து வந்ததால் தங்கம் விலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து புத்தாண்டுக்கு பிறகு வெறும் 3 நாட்களே தங்கம் விலை குறைந்தது. ஆனால் பிற நாட்களில் உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம். மேலும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினாலும் ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1000 அதிகரித்து.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு – உச்ச நீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
நேற்று (06.02.2023) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365 விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.42,920 விற்பனையாகிறது. இந்நிலையில் இன்று (07.02.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 5,373-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.