இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!

0
இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!
இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!
இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!

இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று (அக். 21) 22 கேரட் தங்கம் விலை ரூ.20 குறைந்து, கிராம் ரூ. 4,665க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

உலகளவில் சிறந்த முதலீடு பொருளாக தங்கம் இருக்கிறது. தங்கம் விலை எவ்வளவு இருந்தாலும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தங்க நகைகளை எந்த நாட்டில் வேண்டும் என்றாலும் கொடுத்து அதை அந்த நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் தங்கம் என்பது எதிர்காலத்தில் நல்ல சேமிப்பாக இருக்கும் நிலையில், தமிழக மக்கள் தங்களுடைய பெண்களின் திருமணத்திற்கு தங்க நகையை சீதனமாக கொடுக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலையானது ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிகமாக இருந்தாலும், இன்று (அக். 21) தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ. 20 குறைந்து, 22 கேரட் ஒரு கிராம் தங்கமானது ரூ. 4, 665க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூகுளுக்கு ரூ.1337 கோடி அபராதம் விதித்த இந்திய அரசு – காரணம் என்ன தெரியுமா?

Exams Daily Mobile App Download

அதே போல ஒரு சவரன் தங்கமானது ரூ. 160 குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை கிராம் 50 பைசா குறைந்து ரூ.61.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை குறைவால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேலும் பல நகைக்கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனையாக தங்கம் வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பொதுமக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் இன்றே விரைந்து சென்று தங்கம் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!