கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி – சவரனுக்கு ரூ. 136 உயர்வு!

0
கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி - சவரனுக்கு ரூ. 136 உயர்வு!
கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி - சவரனுக்கு ரூ. 136 உயர்வு!
கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி – சவரனுக்கு ரூ. 136 உயர்வு!

தமிழகத்தில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் தங்கம் விலை சற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4697 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

நாளுக்கு நாள் பருவ நிலை மாற்றம் போல தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தால் அது எந்த சூழ்நிலையிலும் உபயோகமாக இருக்கும். அதனால் பலர் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்தால் தேவைப்படும் போது அதனை அடகு வைத்து பணம் எடுத்து கொள்ளலாம். இந்நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் நினைக்கின்றனர்.

அதற்கு தகுந்தாற் போல நகைக்கடைகளும் புது டிசைன்கள் மற்றும் ஒரு சில பரிசுகளை வழங்கி மக்களை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை சரிவை கண்டது. அதனால் பலர் நகை வாங்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் நேற்று வெளியான அறிவிப்பின் படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று (செப். 30) வெளியான அறிவிப்பின் படி, தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,697 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக ஊர்காவல் படை வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download

மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 37, 576க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) ரூ. 5099 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு சவரன் தூயத் தங்கம் ரூ. 40,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 61.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!