தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – இறுதி பட்டியல் தயாரிக்க குழு அமைப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - இறுதி பட்டியல் தயாரிக்க குழு அமைப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - இறுதி பட்டியல் தயாரிக்க குழு அமைப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – இறுதி பட்டியல் தயாரிக்க குழு அமைப்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். தற்போது இந்த நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களை ஆராய்ந்து இறுதி பட்டியலை தயாரிக்க குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அன்று விதி 110 என்பதன் கீழ் முதல்வர் அறிவித்தார். மேலும் இந்த தள்ளுபடிக்கு தகுதி மற்றும் தகுதியற்ற தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த நவம்பர் 1ம் தேதி அரசு வெளியிட்டது. மேலும் இதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தரவுகளும் தற்போது பெறப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!

இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதில், பலவகையான கடன் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி வழங்கப்பட்ட பல்வேறு நகைக்கடன் குறித்த பட்டியல், ஒரே ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு பட்டியலின் தரவுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த தள்ளுபடி பெற தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்த குழு பட்டியலை தயார் செய்து சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!

அத்துடன் ஒரே ஆதார் எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் பற்றியும் மற்றும் ஒரே ரேஷன் அட்டை எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் பற்றியும் இறுதி பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதையடுத்து தள்ளுபடிக்கு தகுதி உள்ளவர்கள் மீது சந்தேகம் இருந்தால் அவர்களை தகுதியற்றவர்கள் பட்டியலில் குறிப்பிட்டு தகுந்த காரணங்களையும் குறிப்பிட வேண்டும். மேலும் தள்ளுபடிக்கு தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து பதிவாளர் அலுவலகத்திற்கு பிப்ரவரி 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!