தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வெளியான குளறுபடி!

1
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - வெளியான குளறுபடி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - வெளியான குளறுபடி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வெளியான குளறுபடி!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நகைகடன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என உழவர் உழைப்பாளர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குளறுபடி:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றியும் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி. தற்போது தள்ளுபடி செய்வது குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கான நகைகடன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக உழவர் உழைப்பாளர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Reliance Jio vs BSNL வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3GB டேட்டா – முழு விபரம் இதோ!

அதில் கூறப்பட்டதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,112 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், அவரால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வர இயலவில்லை.

இந்த நிலையில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கடன் தள்ளுபடியான நகையும் திருப்பித்தரவில்லை.

கூட்டுறவுக்கடன் தள்ளுபடியும் நடைமுறையில் இல்லாத வகையில் அடங்கல் உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற ஒரு புதிய நடைமுறையை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தகுதியான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்காத வகையில் கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது.

உதாரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் 46,512 பேர். கூட்டுறவுத்துறையில் அடங்கல் இல்லாத காரணத்தால் 34,512 பேர் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி சலுகை கிடைத்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை – அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!!

இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எடுத்துரைத்தோம். இதற்கு அவர் கூட்டுறவுத் துறை அமைச்சர், முதல்வரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று உறுதியளித்தார். தமிழக அரசு விவசாயிகளின் அரசு என்று கூறிக் கொண்டு வெங்காய விலையை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஆகவே, வெங்காயம் விளைவித்த விவசாயிகள் படும் துன்பத்தை அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. எனவே, உடனடியாக வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நிலம் உள்ளவர்கள் மட்டுமே அடங்கல் எடுக்க முடியும். இல்லாதவர்கள் என்ன செய்ய? விவசாய கடன் தள்ளுபடிக்கு அடங்கல் கேக்கலாம்.நகை கடனுக்கு கேட்டால் என்ன செய்ய? அரசு வழங்கும் சலுகையை நிலம் உள்ள பணக்காரன் மட்டுமே பயன்பெற வேண்டுமா? நிலம் இல்லா ஏழைகள் பயன்பெற கூடாதா? என்ன வழிமுறைகள். ஏழைகள் பயன்பெறுமாறு வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!