SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் – வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?

0
SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் - வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?
SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் - வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?
SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் – வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?

SBI வங்கி R-GDS என்னும் நிலையான தங்கநகை டெபாசிட் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைகின்றனர்.

தங்கநகை டெபாசிட்:

மக்கள் அனைவருக்கும் அவர்களது எதிர்காலத்தை பற்றி சிறிது கவலை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்காமல் பிறகு கஷ்டப்படுகின்றனர். அதாவது சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கோ பயன்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதுவரை அனைவரும் டெபாசிட் என்றாலே பணம் டெபாசிட் செய்வது மட்டுமே அறிந்துள்ளனர். ஆனால் தங்க நகைகளையும் டெபாசிட் செய்துகொள்ளும் வகையில் R-GDS என்னும் நிலையான திட்டத்தை முன்னணி வங்கியாக செயல்படும் SBI வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கு குறைந்தபட்சம் 10 கிராம் கோல்டு டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் என்று வரைமுறை ஏதும் இல்லை.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நவ.19 முதல் நேரடி விமான சேவை!

இத்திட்டத்தில் தனி நபர், கூட்டு குடும்பம், நிறுவனங்கள் மூலமாக மற்றும் கூட்டு நிறுவனங்கள் மூலமாக டெபாசிட் செய்து கொள்ளலாம். ஆனால் NRI மட்டும் இத்தகைய திட்டத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 3 வகையான டெபாசிட் முறைகள் உள்ளன. அவை குறுகிய கால வங்கி டெபாசிட் (STBD), நடுத்தர கால அரசு டெபாசிட் (MTGD) மற்றும் நீண்ட கால அரசு டெபாசிட் (LTGD) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குறுகிய கால வங்கி டெபாசிட் (STBD) 1 – 3 வருட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் வருடத்தில் 0.50 சதவிகிதம் வட்டி, 2வது வருடத்தில் 0.55 சதவிகிதம் வரை வட்டி, மூன்று வருடத்தில் 0.60 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். அதனை தொடர்ந்து நடுத்தர கால அரசு டெபாசிட் (MTGD) 5 – 7 வருட திட்டமாகும்.

அக்.25 வரை இரவு ஊரடங்கு அமல், அக்.21 முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியீடு!

இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2.25 சதவிகிதம் வட்டி கிடைக்கும். பின்னர் நீண்ட கால அரசு டெபாசிட் (LTGD) 12-15 வருட திட்டமாகும். இத்தகைய திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இந்த 3 டெபாசிட் முறைகளின் கீழ் திட்டத்தில் சேர தங்க கட்டி, தங்க காசு, மற்றும் பணம் செலுத்தலாம். ஆனால் தங்க கல் போன்றவைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் நகையை முதலீடு செய்துவிட்டு திரும்ப பெறும் போது அது நகை வடிவில் கிடைக்காது. தங்க கட்டி, தங்க நாணயம் அல்லது பணமாக தான் கிடைக்கும். மேலும் தங்கம் திரும்ப பெறும் போது 0.20% கட்டணமாக வசூலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!