Post Officeல் தங்க பத்திர சேமிப்பு திட்டம் – ஜூன் 20 முதல் சிறப்பு முகாம் துவக்கம்!

0
Post Officeல் தங்க பத்திர சேமிப்பு திட்டம் - ஜூன் 20 முதல் சிறப்பு முகாம் துவக்கம்!
Post Officeல் தங்க பத்திர சேமிப்பு திட்டம் - ஜூன் 20 முதல் சிறப்பு முகாம் துவக்கம்!
Post Officeல் தங்க பத்திர சேமிப்பு திட்டம் – ஜூன் 20 முதல் சிறப்பு முகாம் துவக்கம்!

புதுச்சேரியில் உள்ள அஞ்சல் கோட்டத்தில் தங்க பத்திர சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க பத்திர சேமிப்பு:

இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இத்தகைய நேரத்தில் மக்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர். தொழில் துறையில் ஏற்பட்ட சரிவினால் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அஞ்சல் கோட்டத்தில் தங்க பத்திர சேமிப்பு திட்டத்திற்கான முகாம் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆபரணத் தங்கம் மற்றும் கட்டித் தங்கம் போன்றவற்றை வாங்குவதைக் குறைப்பதற்காகவே இந்த தங்க பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்வது தங்கத்தினை கட்டிகளாக வாங்குவதற்கு சமமாகும். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி சேமிக்கலாம். இந்த திட்டம் அரசால் செயல்படுத்தப்படுவாதால் நம்பகத்தன்மை மிக்கது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மேலும் இது ஆதாயம் மிகுந்த திட்டம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தபால் நிலையங்களிலும் 2022–23 ம் நிதியாண்டிற்கான தங்க பத்திர சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் ஜூன் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. .24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.5,091/- என ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். தங்கத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்து பொதுமக்கள் பயன் பெறலாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!