சென்னை: இன்று சவரனுக்கு ரூ.496 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.496 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.496 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.496 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்து சமூக மக்களால் அட்சய திருதியை வருடம்தோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு வருடம் நாளை அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. அதனால் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க திட்டமிடுவர். இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.38,728க்கு விற்பனை ஆகிறது.

சரிந்த ஆபரணத்தங்க விலை:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இருப்பினும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் எதிர்கால தேவைகளுக்கு இந்த முதலீடுகள் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர மக்களின் அவசர தேவைகளுக்கு முதலில் நியாபகம் வருவது தங்க நகைகள் தான். நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.

திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். உக்ரைனில் நடந்து வரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போய் உள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. அண்மைக்காலமாக தாறுமாறான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து தங்க விலை சந்தித்து வருகிறது. நாளை அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, வழக்கமாக அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகை விலை உயரும். இருப்பினும் நடப்பு வருடம் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் அளிக்கும் வகையில் இன்று தங்க விலை சரிந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.38,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,841க்கு விற்பனையாகிறது. இதையடுத்து சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.30க்கு விற்கப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!