சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,485க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை நிலவரம்:
கடந்த மாதம் தங்கத்தின் விலை சற்று குறைவாக இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. என்ன தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் தங்க நகை பிரியர்களுக்கு நகை வாங்கும் மோகம் குறைந்தபாடில்லை. தங்க நகை வாங்குவது சிறந்த சேமிப்பாக உள்ளது. தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இனிமேல் குறைய வாய்ப்பில்லை. எனவே, தற்போதே தங்க நகை வாங்கி சேர்த்துக் கொள்வது நல்லது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்? ஆலோசனைக்கு பின் தகவல்!
மத்திய அரசு பிறப்பித்த ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக தங்க நகை வாங்கினால் அதன் மதிப்பு எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும் நிலை உள்ளது. இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி நேற்றைய விலையை விட கிராம் ஒன்றிற்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,485க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.35,880க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,700க்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சரிந்து தங்கம் விலை ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.