விபத்தில் சுயநினைவை இழக்கும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

0
விபத்தில் சுயநினைவை இழக்கும் கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
விபத்தில் சுயநினைவை இழக்கும் கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
விபத்தில் சுயநினைவை இழக்கும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எதிர்பாராத திருப்பமாக கோபிக்கு விபத்து ஏற்பட இந்த விபத்து மூலம் அவர் சுய நினைவை இழப்பது போல நடித்து தனது குடும்பத்தை ஏமாற்றுவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

சமீப காலமாக வெளியாகிக் கொண்டிருக்கும் பரபரப்பான எபிசோடுகள் மூலம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைத்திருக்கும் ஒரு சீரியல் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இப்போது ஒரு முக்கியமான தருணத்திற்கு வந்திருக்கிறது. அந்த வகையில் மனைவி மற்றும் காதலி இருவரிடமும் இரட்டை கேம் ஆடி வந்த கோபி தற்போது கையும் களவுமாக மாட்டும் தருணம் அரங்கேற இருக்கிறது. இதுவரை இந்த சீரியலில் கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட ராதிகா அவரை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

Exams Daily Mobile App Download

இருந்தாலும் ராதிகாவை விடாமல் துரத்தும் கோபிக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மறுபக்கத்தில், கோபியை பழிவாங்குவதற்காக பாக்கியா வீட்டுக்கு செல்லும் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ், கோபியின் நடவடிக்கையை பற்றி அவரது குடும்பத்தாரிடம் சொல்கிறார். அதே போல சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தாத்தா ராமமூர்த்தி மற்றும் எழில் இருவரும் கோபி பற்றிய உண்மைகளை குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டியதாகிறது.

ராதிகா & கோபியை மருத்துவமனையில் ஒன்றாக பார்த்து விடும் பாக்கியா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

இப்போது கோபியின் ரகசிய காதல் பற்றி தெரிந்ததும் அவரை வீட்டுக்கு வர சொல்லி அழைக்கிறார் ஈஸ்வரி. இதற்கிடையில், வீட்டில் நடந்த விஷயங்களை அறிந்து கொண்ட கோபி வேகமாக வண்டியை ஒட்டி வந்து விபத்துக்குள்ளாகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோபி மயக்கத்திலும் ராதிகா மற்றும் பாக்கியாவின் பேரை உச்சரித்து அவர்களுக்கு தகவல் சொல்ல மொபைல் எண்ணை கொடுக்கிறார். இப்போது கோபியை பார்க்க இருவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிகிச்சை எடுத்து வரும் கோபி கண் விழித்தால் ஈஸ்வரியின் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதை மனதில் வைத்து தனது சுய நினைவை இழந்தது போல நடித்து கோபி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், கோபிக்கு விபத்து நடந்திருப்பதால் ஈஸ்வரி உட்பட அவரது குடும்பத்தார் எல்லாரும் அவரை கவனித்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டி கோபியிடம் ராதிகா பற்றிய விஷயத்தை கேட்காமல் போகலாம் என்று தெரிகிறது. எப்படியோ இந்த முறையும் கோபி பிரச்சனையில் சிக்காமல் தப்பிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here