உலகளவில் 63.01 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – பொதுமக்களே உஷார்!

0
உலகளவில் 63.01 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு - பொதுமக்களே உஷார்!
உலகளவில் 63.01 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – பொதுமக்களே உஷார்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63.01 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அதன் பரவல் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. பல வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்தனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவதே ஒரே வழியாக இருந்தது. அதனால் கடந்த 2 ஆண்டுகளில் பல முறை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63.01 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், இன்னும் முற்றிலுமாக கொரோனா வைரஸ் அழியவில்லை. அதுவே இந்த அதிகரிப்பிற்கு காரணம் ஆகும். கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி இருக்கிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு – நாளை (அக். 19) முதல் தொடக்கம்!

கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உருமாறிய வைரஸ் தாக்கம் காரணமாக கொரோனாவை முற்றிலுமாக அளிக்கமுடியவில்லை. உலகளவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 60 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரத்து 671 பேர் குணமடைந்து இருப்பதாகவும், மேலும் இதுவரை 65 லட்சத்து 72 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!