கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பவானியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும் பாதிப்புகள் குறையவில்லை. தற்போது கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது.
ஆப்கன், பாகிஸ்தான் இடையே விமான சேவை – செப்டம்பர் 13 முதல் தொடக்கம்!
அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 40 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 பள்ளிகள் மூடல் – மாணவர், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் பவானியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.