இந்தியாவின் புவியியல் கூறுகளும் வரலாற்றில் அவற்றின் தாக்கமும்

0
இந்தியாவின் புவியியல் கூறுகளும் வரலாற்றில் அவற்றின் தாக்கமும்

பொதுவாக வரலாற்றுக்கு இரு கண்கள் உண்டு எனக் கூறுவர். ஒன்று காலம். மற்றொன்று புவியியல் அமைப்பு. வரலாற்றின் போக்கை பெரும்பாலும் காலமும் இடமும் நிர்ணயிக்கின்றன என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அதன் புவியியல் கூறுகளே பெரிதும் நிர்ணயிக்கின்றன. இந்திய வரலாற்றிலும் புவியியலின் தாக்கத்தை காணலாம். எனவே இந்தியாவின் புவியியல் கூறுகளை அறிந்து கொள்வதன் மூலம் அதன் வரலாற்றை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்தியத் துணைக்கண்டம் ஒரு தெளிவான புவியியல் அமைப்பபைக் கொண்டுள்ளது. இமாலய மலைகள் இந்தோ – கங்கைச் சமவெளி தென்னிந்திய தீபகற்பம் என அதனை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். இத்துணைக் கண்டத்தில் இந்தியா,பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான் என்ற ஐந்து நாடுகள் உள்ளன. அவற்றில் இந்தியாவே பெரியதாகும். 28 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாக அது விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடிக்கு மேலாகும்.

இமாலய மலைகள்

  • இந்தியாவின் வடக்குப் பகுதியில் இமாலய மலைகள் அமைந்துள்ளன.
  • இந்தியாவின் வடமேற்குக் கோடியிலுள்ள பாமிர் முடிச்சில் தொடங்கும் இது கிழக்காக நீண்டு கிடக்கிறது.
  • இதன் நீளம் கிட்டத்தட்ட 2560 கிலோ மீட்டர்களாகும்.
  • சராசரி அகலம் 240 முதல் 320 கிலோ மீட்டர்களாகும். இமாலயத்தின் மிக உயரமான சிகரம் எவெரஸ்ட் எனப்படுகிறது.
  • கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 8848 மீட்டர்களாகும்.
  • சைபீரியாவிலிருந்து மத்திய ஆசியா வழியாக வீசும் கடும் குளிர்காற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக இமய மலைகள் திகழ்கின்றன.
  • இதனால் இந்தியாவின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் சீரான வெப்பத்துடன் காணப்படுகிறது.
  • குளிர்காலத்தில் இமாலயப் பகுதியில் பனிமூடிக்கிடக்கிறது. எனவே இதன் பெரும்பகுதி வாழ்வதற்கேற்றதாக இல்லை.
  • படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் இயற்கைத் தடுப்பாக இமயமலைகள்; இருந்துவந்தன என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது.
  • ஆனால் வடமேற்கு மலைகளில் காணப்படும் சைபர், போலன், குர்ரம், கோமல் போன்ற கணவாய்கள்; இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் எளிய வழித்தடங்களாக அமைந்துள்ளன.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
  • இந்துகுஷ், சுலைமான், கிர்தார் மலைத்தொடர்களில் இக்கணவாய்கள் உள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இக்கணவாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெற்றன.
  • படையெடுப்பாளர்களும், குடியேறிகளும் இக்கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்தோ-ஆசிரியர்கள், இந்தேதா-கிரேக்கர்கள், பார்த்தியர்கள், சாகர்கள், குஷானர்கள், ஹ_ணர்கள், துருக்கியர்கள் போன்றோர் இக்கணவாய்கள் மூலமே இந்தியா வந்தனர்.
  • இப்பகுதியிலுள்ள ‘ஸ்வாத்’ பள்ளத்தாக்கும் ஒரு முக்கிய வழித்தடமாகும். மாசிடோனியாவின்; அலெசாந்தர் இவ்வழியாகத்தான் இந்தியாமீது படையெடுத்தார்.
  • படையெடுப்பாளர்களைத் தவிர சமயப் பரப்பாளர்களும், வணிபர்களும்கூட இவ்வழிதடங்கள் மூலமாக இந்தியாவுக்கு வந்தனர்.
  • எனவும் இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்புக்கும் பண்பாட்டுத் தொடர்புக்கும் வடமேற்கு மலைகளிலுள்ள கணவாய்கள் வழிவகுத்தன.
  • காஷ்மீருக்கு வடக்கே காரகோரம் மலைத்தொடர் உள்ளது.
  • உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரமான மவுண்ட் காட்வின் ஆஸ்டின் இங்கு தான் உள்ளது.
  • இமயமலையின் இப்பகுதயிலுள்ள கணவாய்கள் உயரமாகவும் குளிர்காலத்தில் பனி படர்ந்தும் காணப்படுகின்றனன.
  • கில்ஜித் வழியாக மத்திய ஆசியாவிற்கு செல்லும் காரகோரம் பெருவழியும் இங்குள்ளது. ஆனால் இத்தடத்தில் மிகக் குறைவான போக்;குவரத்தே நடைபெறுகிறது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கு உயர்ந்த மலைகளால்; சூழப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு கணவாய்கள் மூலம் இப்பள்ளத்தாக்கை சென்;றடையலாம்.
  • பண்பாட்டிலும் பாரம்பாயத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
  • இமாலய மலைகளின் அடிவாரத்தில் நேபாளம் உள்ளது.
  • கங்கைச் சமவெளியிலிருந்து பல்வேறு கணவாய்கள் மூலம் நேபாளத்தை சென்றடையலாம்.
  • கிழக்கே அஸ்ஸாம் வரை இமயமலைகள் நீண்டு கிடக்கின்றன.
  • பாட்கோய், நாகாய், லுஷாய் போன்ற மலைத்தொடர்கள் இவற்;றில் குறிப்பித்தக்கவை. கடும் மழைக்கும் அடர்ந்த காடுகளுக்கும் இவை பெயர் பெற்றவை.
  • ஆனால், வாழ்வதற்கான சூழல் மிகவும் குறைவே. வடகிழக்கு இந்தியாவின் மலைகளைக்; கடந்து செல்வதும் எளிதல்ல. எனவே இப்பகுதி பெரும்பாலும் தனித்தே காணப்படுகிறது.

இந்தோ – கங்கைச் சமவெளி

  • கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா ஆகிய மூன்று முக்கிய நதிகள் பாயும் பகுதியே இந்தோ – கங்கைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது.
  • ஆறுகளில் அடித்து வரப்படும் கரிசல் மண் மிகப்பரந்த இந்த நிலப்பரப்பில் படிவதால் வளம் மிக்க விளை நிலங்கள் இங்குள்ளன.
  • இமய மலைகளுக்கு அப்பால் சிந்து நதி உற்பத்தியாகிறது. ஜூலம், சீனாப், ராவி, சட்லெஜ், பியாஸ் ஆகியன இதன் முக்கிய கிளை நதிகளாகும்.
  • சிந்து நதியால் மிகவும் பயன்பெறுவது பஞ்சாப் சமவெளியாகும். பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பகுதி என்று பொருள்.
  • சிந்துப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் சிந்து மாகாணம் அமைந்துள்ளது. சிந்துப் பள்ளத்தாக்கு மிகவும் வளமான நிலங்களைக் கொண்டுள்ளது.
  • சிந்து பள்ளத்தாக்கிற்கும், கங்கைச் சமவெளிக்கும் இடையே தார்ப்பாலைவனமும்ää ஆரவல்லி குன்றுகளும் உள்ளன.
  • ஆரவல்லி குன்றுகளில் மவுண்ட் அபு மிகவும் உயரமானதாகும் (5650 அடி) இமயமலைகளில் உற்பத்தியாகும் கங்கை நதி தெற்காக ஓடி பின்னர் கிழக்கு நோக்கி பாய்கிறது.
  • கங்கை நதிக்கு இணையாக ஓடிவரும் யமுனை நதி பின்னர் அதனுடன் ஒன்று கலக்கிறது. இவ்விரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி ‘தோ ஆப்’ என்று அழைக்கப்படுகிறது.
  • கோமதி, சரயு, காக்ரா, காண்டக் போன்றவை கங்கைநதியின் முக்கிய துணைநதிகளாகும்.
  • இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கங்கைச் சமவெளியும் பிரம்மபுத்திரா சமவெளியும் ஒன்றிணைகின்றன.
  • இமய மலைகளுக்கு அப்பால் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி திபெத் வழியாகப் பாய்ந்து இந்தியாவின் வடகிழக்குச் சமவெளியை அடைகிறது.
  • சமவெளியில் மெல்ல ஊர்ந்து செல்லும் இந்நதியின் பரப்பு மிகவும் விரிவடைந்திருப்பதோடு,  பல தீவுகளையும் கொண்டுள்ளது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
  • நகரமையங்கள் உருவாவதற்கு இந்தோ – கங்கைச் சமவெளி பெரும்பங்காற்றியுள்ளது.
  • குறிப்பாக, நதிக்கரைகளிலும், இரு நதிகள் ஒன்று சேருமிடத்திலும் இத்தகைய நகரமையங்கள் தோன்றி வளர்ந்தன. சிந்து சமவெளியில் ஹரப்பா பண்பாடு செழித்தோங்கியது.
  • கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் வேதகாலப் பண்பாடு சிறந்து விளங்கியது. பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, பாடலிபுத்திரம் போன்றவை கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்த முக்;கிய நகரங்களாகும்.
  • கங்கை நதியுடன் சோன் ஆறு கலக்கும் இடத்தில் பாடலிபுத்திர நகரம் அமைந்திருந்தது. பண்டைக் காலத்தில், மௌரியர்கள், சுங்கர்கள், குப்தர்கள் போன்ற பேரரசுகளின் தலைநகராக பாடலிபுத்திரம் விளங்கியது.
  • கங்கைச் சமவெளியின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரம் டெல்லி.
  • இந்திய வரலாற்றின் போக்கை நிர்ணயித்த முக்கிய போர்களான குருஷேத்திரம், தரெய்ன், பானிபட்டு ஆகிய போர்கள் டெல்லிக்கு மிக அருகாமையில்தான் நடைபெற்றன.
  • வளமைக்கும் செல்வத்திற்கும் பெயர் பெற்று விளங்கிய கங்கைச் சமவெளிமீது அயல்நாட்டு படையெடுப்பாளர்கள் அதிக மோகம் கொண்டதில் வியப்பேதும் இல்லை.
  • கங்கைச் சமவெளியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு அரசுகளட போட்டியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • குறிப்பாக, கங்கை யமுனை தோஆப் பகுதியைக் கைப்பற்றவும், தம் வசம் வைத்திருக்கவும் பெரும் போட்டியும், போர்களும் நடைபெற்றன.
  • மேலும் இப்பகுதியில் பாயும் நதிகளும், கால்வாய்களும் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்பட்டன. பண்டைக் காலத்தில் சாலைகள் அமைப்பது கடினமாக இருந்தது.
  • எனவே, பயணிகளும், வணிகர்களும் படகுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தினர். ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு ஆட்சிக்காலம் வரை படகுப் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

தெற்கத்திய தீபகற்பம்

  • வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் கோடாக அமைந்திருப்பவை விந்திய சாத்பூரா மலைகளும், நர்மதை, தபதி ஆறுகளுமேயாகும். விந்திய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி தக்;காணப்பீடபூமி என்;று அழைக்கப்படுகிறது.
  • எரிமலைப் பாறைகளாலான இது வடஇந்திய மலைகளிடமிருந்து வேறுபட்டதாகும். இப்பாறைகள் செதுக்குவதற்கு எளிதாக இருப்பதனால், தக்காணப்பகுதியில் குடைவரைக் கோயில்களும், மடாலயங்குளும் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
  • தக்காணப் பீடபூமியின் இருமருங்கிலும் கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடடர்ச்சி மலைகள் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாக் கடலுக்கும் இடையே சோழ மண்டலக் கடற்கரை அமைந்துள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையே உள்ள நிலப்பகுதி கோவா வரை கொங்கணம் எனப்படுகிறது.
  • அதற்கப்பாலுள்ள பகுதி கனாரா என்றும்; தென்கோடிப் பகுதி மலபார் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜீன்னார், கன்ஹேரி, கார்வே போன்ற கணவாய்கள் உள்ளன. மேற்கிலுள்ள துறைமுகங்களை இணைக்கும் வணிகவழித் தடங்களாக இவை விளங்கின.
  • வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் தக்காணப் பீடபூமி ஒரு பாலம் போல செயல்பட்டது. இருப்பினும், விந்திய மலைகளிலுள்ள அடர்ந்த காடுகள் இப்பகுதியை வடக்கிலிருந்த தனிமைப்படுத்துவதாக அமைந்திருந்தன.
  • எனவே தென்னிந்திய தீபகற்பத்தின் மொழியும் பண்பாடும் நெடுங்காலமாக அவற்றின் தனித்தன்மை மாறாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
  • தென்கோடியில் புகழ்பெற்ற பாலக்காட்டுக் கண்வாய் உள்ளது.
  • காவிரிப்பள்ளத்தாக்கையும், மலபார் கடற்கரையையும் இணைக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் குறுக்கே இது அமைந்துள்ளது.
  • பண்டைக் காலத்தில் இந்தோ – ரோமானிய வர்த்தகத்திற்கான முக்கிய வழித்தடமாக பாலக்காட்டுக் கண்வாய் விளங்கியது.
  • தென்னிந்திய தீபகற்பத்தின் மிகவுயர்ந்த மலைசிகரம் ஆனைமுடி என்பதாகும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மற்றொரு உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அவ்வளவு உயரமானவையல்ல.
  • மேலும் இவற்றில் காணப்படும் இடைவெளிகள் மூலமாகத்தான் பல ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • அரிக்கமேடு, மாமல்லபுரம், காவேரிப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்கள் சோழ மண்டலக் கடற்கரையில்தான் இருந்தன.
  • தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய நதிகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று இணையாகவே பாய்ந்து செல்கின்றன. தீபகற்பத்தின் கிழக்குக் கோடியில் மகாநதி பாய்கிறது.
  • நர்மதை, தபதி நதிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.
  • கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, காவிரி போன்ற பிற நதிகள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்கின்றன. இந்த நதிகளின் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசன வசதியால், நெல் விளையும் வளமான நிலப்பகுதிகளை இங்கு காணமுடிகிறது.
  • ரெய்ச்சூர் தோஆப் எனப்படும் கிருஷ்ணா – துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை கைப்பற்றுவதற்காக தென்னிந்திய அரசுகள் தொடர்ந்து போட்டியிட்ட வண்ணம் இருந்தன.
  • இவ்விரு நதிகளின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள சமவெளியில் சாதவாகனர்களின் அரசு புகழ்மிக்கு விளங்கியது. கிறித்துவ சகாப்தத்தின் முற்பகுதியில் இச்சமவெளிpயில் பல்வேறு நகரங்களும் துறைமுகங்களும் செழித்து விளங்கின.
  • இன்னும் தெற்கே, காவிரிப் பள்ளத்தாக்கு மிகவும் தனித்தன்மைகொண்ட புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. சோழப் பேரரசின் அமைவிடமாக அது விளங்கியது.
  • பண்டைக் காலத்திலிருந்தே காவிரிப் பள்ளதாக்கு மொழி, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றுக்கு புகழ் பெற்றதாகும்.
  • தென்னிந்திய தீபகற்பம் நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால்ää இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல்;சார் நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டுவந்தனர்.
  • பண்டைக்காலம் தொட்டே, கடல் வாணிபம் இப்பகுதியில் செழித்தோங்கியது.
  • கிழக்கே, ஜாவா, சுமத்திரா, பர்மா, கம்போடியா போன்ற பகுதிகளுடன் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. வாணிபம் தவிர, இந்தியக்க கலை, சமயம், பண்பாடு போன்றவையும் இப்பகுதிகளுக்கு பரவியது.
  • தென்னிந்தியாவிற்கும், கிரேக்க – ரோமானியருக்கும் இடையே நிலவிய வர்த்தகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பு வரலாற்றுப் புகழ்வாய்ந்தவையாகும்.

இந்தியா – வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு

  • பல்வேறு இனமமக்களும் ஒன்று கலந்த காலகட்டம் என்பதனால் பண்டைய இந்திய வரலாறு படிப்பதற்கு பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது.
  • ஆரியருக்கு முற்பட்ட இனத்தவர், இந்தோ ஆரியர்கள், கிரேக்கர்கள், சைத்தியர்கள், ஹீணர்கள்,  துருக்கியர்கள் என பல்வேறு இனத்தவரும் இந்திய மண்ணை தங்களது தாயகமாகக் கொண்டனர்.
  • இந்தியப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதற்கு ஒவ்வொரு இனமும் தங்களாலான பங்களிப்பை வழங்கியுள்ளன. பல்வேறு இனங்களும் இன்று யார் எந்த இனம் என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒன்று கலந்துவிட்டன. காலங்காலமாக பல்வேறு பண்பாடுகளும் ஒன்று கலந்துவிட்டன.
  • வேத இலக்கியங்களில் பல திராவிட அல்லது ஆரியருக்கு முந்தைய கால சொற்களைக் காண முடிகிறது. அதேபோல் சங்க இலக்கியத்தில் பாலி மற்றும் வடமொழிச் சொற்களும் உள்ளன.
  • பண்டைக் காலத்திலிருந்தே இந்தியாவில் பல சமயங்கள் இருந்துள்ளன. பண்டைய இந்தியாவில் இந்துசமயம், சமண, புத்த சமயங்கள் புகழ்பெற்றிருந்தன.
  • ஆனால் பண்பாட்டளவில் இவை ஒனறோடொன்று கலந்துவிட்டிருந்தன. இந்திய மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசினாலும் சமயங்களைப் பின்பற்றினாலும்ää சமூகப் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் ஒரு சில பொதுப் பண்புள்ள வாழ்ககை முறையைக்; காணமுடிகிறது.
  • எனவே நமது நாட்டில் வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையுணர்வு மேலோங்கியுள்ளது என்று துணிந்து கூறலாம்.
  • பழங்காலத்திலேயே இந்த ஒற்றுமைக்கான விதை ஊன்றப்பட்டது. பரந்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரே நாடு என்ற உணர்வு மேலோங்கியிருந்தது.
  • பரதர் என்ற பழங்குடியினரின் பெயரால் இத்துணைக் கண்டம் பாரத வர்ஷம் என்றே குறிக்கப்பட்டு வந்தது. பண்டைய கவிஞர்களும் தத்துவஞானிகளும் எழுத்தாளர்களும் இந்நிலப்பகுதியை ஒன்றுபட்ட தேசமாகவே கருதிவந்தனர்.
  • மௌரியர் மற்றும் குப்தப் பேரரசுகளின் காலத்தில் அத்தகைய அரசியல் ஒற்றுமை ஏற்பட்டதைம் இந்திய வரலாறு எடுத்துக் கூறுகிறது.
  • அயல்நாட்டவரும் இந்நிலப்பகுதியை ஒரே நாடாகவே கருதி வந்தனர். ‘ஹிந்த்’ என்ற பெயர் சிந்து என்ற நதியின் பெயரிலிருந்தே பெறப்பட்டது.
  • அயலவர்கள் முதன் முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும் பகுதி என்பதனால் இத்துணைக் கண்டத்தை ‘சிந்து’ என்றே அழைத்தனர்.
  • பின்னர் அது கிரேக்கர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் ‘ஹிந்த்’ என்றே குறிக்கப்படுகிறது.
  • மொழி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் பண்டைக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் நாட்டின் பொது மொழியாக பிராகிருதம் விளங்கியது.
  • இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுக்களில் பிராகிரத மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • பண்டைய காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியன நாடு முழுவதும் பரவலாக படிக்கப்பட்டன. வடமொழி இலக்கியங்களான இவையிரண்டும் பல்வேறு இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டன.
  • இந்தியப் பண்பாட்டு விழுமியங்களும், கருத்துக்களும் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தபோதிலும், அடிப்படையில் அவை ஒரு கருத்தையே உணர்த்துவதாக இருந்தது.
  • இவ்வாறு இந்தியா இன்று பல்வேறு சமயங்களையுடைய சமுதாயமாக மலர்ந்துள்ளது. பன்முகப் பண்பாட்டைப் போற்றும் சமுதாயமாக எழுச்சி பெற்றுத் திகழ்கிறது.
  • இருப்பினும் அடிப்படையில் காணப்படும் ஒற்றுமையுணர்வும், இந்திய சமுதாயத்தின் பன்முகத்தன்மையுமே அதன் ஒப்பற்ற வலிமைகளாகத் திகழ்கின்றன.
  • வருங்கால வளர்ச்சிக்கும் அவை வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!