பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு II

3
பொதுத்தமிழ் வினா விடை - பிரிவு II
பொதுத்தமிழ் வினா விடை - பிரிவு II
பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு II

Q.1)தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும் ?

a)2

b)4

c)6

d)8

Q.2) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக

a)கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது

b)புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்

c)பொழுது கூவ சேவல் எழுந்தது  கதிர் புலர

d)சேவல்  கூவ பொழுது புலர கதிர் எழுந்தது

Q.3) கெழீஇ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

a)வினைத்தொகை

b)சொல்லிசை அளபெடை

c)ஆகுபெயர்

d)அன்மொழித்தொகை

Q.4) Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:

a)முதல்வர்

b)கொள்கை

c)அதிகாரி

d)தலைவர்

Q.5)”என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்று கூறியவர் யார் ?

a)சுந்தரர்

b)மாணிக்கவாசகர்

c)திருநாவுக்கரசர்

d)திருஞானசம்பந்தர்

Q.6)செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக

a)பரிசை விழாத் தலைவர் வழங்கினார்

b)விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது

c)விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்

d)பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை

Q.7) தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர் ?

a)இளங்கோவடிகள்

b)திருத்தக்கத் தேவர்

c)நாதகுத்தனார்

d)சீத்தலைச் சாத்தனார்

Q.8) மாமழை -இலக்கணம் அறிக :

a)உவமைத் தொகை

b)வினைத் தொகை

c)உருவகம்

d)உரிச் சொற்றொடர்

Q.9) திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார் ?

a)ஜி .யு .போப்

b)போப் வெல்லஸ்லி

c)கால்டுவெல்

d)வீரமாமுனிவர்

Q.10) நிகண்டுகளில் பழமையானது  எது ?

a)அஞ்சா நிகண்டு

b)சதுரகாதி

c)சூடாமணி நிகண்டு

d)சேந்தன் திவாகரம்

Q.11) “தமிழுக்கு அமுதென்றுபேர் -அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “-எனப் பாடியவர் யார் ?

a)பாரதியார்

b)பாரதிதாசன்

c)கண்ணதாசன்

d)வாணிதாசன்

Q.12) மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டுள்ளது ?

a)12

b)24

c)36

d)30

Q.13) அறுசுவையின் பயன்களில் கீழ்கண்டவைகளில் தவறானது எது ?

a)இனிப்பு -வளம்

b)கார்ப்பு -உணர்வு

c)உவர்ப்பு -தெளிவு

d)கைப்பு –இனிமை

Q.14) ஆசியஜோதி என்ற நூலின் ஆசிரியர் யார் ?

a)ஜவஹர்லால் நேரு

*b)கவிமணி தேசிய விநாயகம்

c)லால் பகதூர் சாஸ்திரி

d)பாரதியார்

Q.15) கேண்மின் -என்ற சொல்லின் பொருள் யாது ?

a)கேளுங்கள்

b)கேட்டவர்

c)கெட்டவர்

c)கண்டவர்

Q.16) “கொடு” என்பதன் வினைமுற்று என்ன?

a)கொடுத்தல்

b)கொடுத்த

c)கொடுத்தவன்

d)கொடுத்தான்

Q.17) கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது ?

a)கலித்தொகை

b)குறுந்தொகை

c)நற்றிணை

d)புறநானூறு

Q.18)தமிழின் முதல் கள ஆய்வு நூலக கருதப்படுவது ?

a)திருவாதவூரார் புராணம்

b)பெரியபுராணம்

c)அரிச்சந்திர புராணம்

d)திருக்குற்றாலபுராணம்

Q.19)”ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன ” இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார் ?

a)வல்லிக்கண்ணன்

b)பட்டுக்கோட்டையார்

c)அறிஞர் அண்ணா

d)மீரா

Q.20)பிரித்தெழுதுக : “ஆருயிர் “

a)அருமை + உயிர்

b)ஆர் + உயிர்

c)ஆரு +உயிர்

d)ஆ +ருயிர்

Q.21)வலுவுச்சொல் அல்லாதது எது ?

a)வலதுபக்கச் சுவர்

b)வலப்பக்கச்  சுவர்

c)வலதுபக்கச்  சுவற்றில்

d)வலப்பக்கச் சுவற்றில்

Q.22)பிறமொழிச் சோழர்கள் நீக்கிய தொடர் தேர்க

a)தாமரை மலர்ந்தது

b)தாமரை அலர்ந்தது

c)பங்கயம் மலர்ந்தது

d)பங்கஜம் மலர்ந்தது

Q.23)”மணமக்கள் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க ! வாழ்க !”-இத்தொடர் எவ்வகை வாக்கியம் ?

a)உணர்ச்சி வாக்கியம்

b)தனி வாக்கியம்

c)கலவை வாக்கியம்

d)கட்டளை வாக்கியம்

Q.24) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு ” -இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது ?

a)ஒருஉ எதுகை

b)கூழை எதுகை

c)அடி எதுகை

d)முற்று எதுகை

Q.25) தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம் எத்தனை ?
*a)42
b)44
c)46
d)48

Q.26)”உள்ளங்கை நெல்லிக்கனி போல ” -இவ்வுவமை  விளக்கும்  பொருள்

a)தெளிவு

b)பாதுகாப்பு

c)பெரிது

d)பயனற்றது

Q.27)பொருந்தாச் சொல்லைச் கண்டுபிடித்து எழுதுக

சால ,உறு ,தவ ,கூர் ,குறை ,நனி

a)சால

b)தவ

c)குறை

d)உறு

Q.28) ஒருமை ,பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக

a)தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது

b)தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன

c)தோட்டத்தில் மாடுகள் மேய்ந்தது

d)தோட்டத்தில் மாடுகள் மேயும்

Q.29) “பாடு ” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயரைக் காண்க

a)பாடிய

b)பாடி

c)பாடியது

d)பாடியவர்

Q.30) சிலப்பதிகாரம் பின்வருவனவற்றுள் உண்மை எது ?

a)அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்

b)உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

c)ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

d)இவை அனைத்தும் உணர்த்தும்

Answers:

1 a 11 b 21 b
2 d 12 d 22 a
3 a 13 d 23 a
4 b 14 b 24 d
5 c 15 a 25 a
6 b 16 d 26 a
7 d 17 a 27 c
8 d 18 b 28 b
9 d 19 a 29 d
10 d 20 a 30 d

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!