TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா – விடை!! Day 1!!!

0
TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா - விடை!! Day 1!!!
TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா - விடை!! Day 1!!!

Q.1)“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்” – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a)அகநானூறு                                      b)புறநானூறு

c)கலித்தொகை                                  d)நற்றிணை

Q.2)ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -மே

a)ஆசை                 b)பாசம்                 c)அன்பு                d)அறிவு

Q.3)கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் அனைவர்க்கும் கற்றலை விட எது சிறந்தது என்று மதுரைக் கூடலூர் கிழார் கூறுகிறார்?

a)பொறையுடைமை                          b)அன்புடைமை

c)பண்புடைமை                                  d)ஒழுக்கமுடைமை

Q.4)கங்குல் – எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

a)இரவு                                   b)பகல்

c)நள்ளிரவு                                            d)நண்பகல்

Q.5)வேளாண்வேதம் என்று அழைக்கபடும் நூல் எது?

a)மூதுரை                                             b)நான்மணிக்கடிகை

c)பழமொழி                                         d)நாலடியார்

Q.6)நாலடியாரின் பாவகை யாது?

a)கலிப்பா                                             b)விருத்தப்பா

c)வெண்பா                                          d)ஆசிரியப்பா

Q.7)தமிழ்புலவர்களுள் இளவரசர் என்று போற்றி புகழப்படுபவர் யார்?

a)திருமங்கையாழ்வார்                   b)சீத்தலைச் சாத்தனார்

c)தொண்டரடிப் பொடியாழ்வார் d)திருத்தக்கத் தேவர்

Q.8)மீன் என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?

a)நற்றிணை                                        b)குறுந்தொகை

c)கலித்தொகை                                  d)அகநானூறு

Q.9)உரன் என்பதன் பொருள் என்ன?

a)வலிமை             b)வாய்மை           c)வளமை       d)துணிவு

Q.10)கூடல்நாயகன்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?

a)வள்ளுவர்                                          b)சேக்கிழார்

c)குலசேகரஆழ்வார்                         d)அப்பர்

Q.11)சிறந்த அறிவுரைகளைக் கூறும் நூல் எது?

a)நல்வழி                                              b)ஆத்திசூடி

c)மூதுரை                                             d)கொன்றை வேந்தன்

Q.12)கீழ்கண்டவர்களில் “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”  என பாடியவர் யார்?

a)பாரதியார்

b)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

c)திரு. வி. கல்யாண சுந்தரனார்

d)மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

Q.13)“நீருக்குள் பாசி போல” – என்பது எதை குறிக்கிறது?

a)அழகு                 b)கருணை           c)மதிப்பு                            d)நட்பு

Q.14)கல்வி அழகே அழகு -என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

a)நாலடியார்                                       b)அகநானூறு

c)நற்றிணை                                        d)பதிற்றுப்பத்து

Q.15)தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

a)கைலாசநாதர்                                                 b)நடராசர்

c)மதுரை சொக்கநாதர்                   d)காசி விஸ்வநாதர்

Q.16)பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு- என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

a)திரிகடுகம்                                       b)நாலடியார்

c)ஏலாதி                                                d)சிறுபஞ்சமூலம்

Q.17)“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என பாடியவர் யார்?

a)அயோத்திதாசர்

b)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

c)திரு. வி. கல்யாண சுந்தரனார்

d)பாரதியார்

Q.18)கலிங்கத்துபரணியை இயற்றியவர் யார்?

a)பகழக்கூத்தர்                                  b)செயங்கொண்டார்

c)திரிகூடராசப்பகவிராயர்                            d)வில்லிப்புத்தூரர்

Q.19)சுந்தரர் பின்பற்றிய மார்க்கம் எது?

a)சக மார்க்கம்                                   b)சித்தி மார்க்கம்

c)முக்தி மார்க்கம்                             d)தாசமார்க்கம்

Q.20)”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என பாடியவர் யார்?

a)அயோத்திதாசர்                             b)பாரதியார்

c)திரு.வி.க                                            d)கவிமணி

Download Answers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!