தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் – வாக்காளர்கள் கவனத்திற்கு!!

0
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் - வாக்காளர்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் - வாக்காளர்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் – வாக்காளர்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் நாளை (06.04.2021) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் யாவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முதலாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாக்களிப்பு :

இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமனுக்குமான முதல் கடமை வாக்களிப்பதாகும். ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கான பிரதிநிதியினை தேர்தெடுப்பதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

அவ்வாறு வாக்களிக்க/ஓட்டளிக்க உள்ளோருக்கான தகுதி 18 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலும். தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிதாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் கவனத்திற்கு ஒரு புதிய அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதனை கீழே விரிவாக வழங்கியுள்ளோம்.

வாக்காளர்களின் கவத்திற்கு …!

  • வாக்காளர் அடையாள அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • வாக்களிக்க வீட்டில் இருந்து செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
  • வலது கைக்கு மட்டும் கிளவுஸ் போட வேண்டும். இது இலவசமாக வாக்குச்சாவடி மையத்திலே தரப்படும்.
  • வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளியில், மற்ற வாக்காளர்களுடன் வரிசையில் நிற்கும்போது 6 அடி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • ஒருவரை மட்டுமே வாக்குச்சாவடி மையத்துக்குள் போலீசார் அனுப்பி வைப்பார்கள். அவர் ஓட்டு போட்டு முடிந்து வெளியே வந்த பிறகுதான் அடுத்தவர் ஓட்டு போட உள்ளே செல்ல முடியும்.
  • வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றதும், கையை சானிடைசர் போட்டு துடைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாக்குச்சாவடி மையத்திற்குள் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். முதல் அதிகாரி, நம்முடைய மாஸ்கை கழட்ட சொல்லி, அடையாள அட்டையை உறுதிபடுத்துவார். ஐடி புரூப் வைத்து வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சோதனை செய்து, டிக் செய்து கொள்வார்.
  • அடுத்து, வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
  • அடுத்து 2வது அதிகாரியிடம் சென்று, அவரிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும். அவர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து ஓட்டுப்போட அனுப்பி வைப்பார்.
  • 3வது அதிகாரி உங்களிடம் உள்ள வாக்காளர் சிலிப்பை வாங்கி பார்த்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். சரியாக இருந்தால், உங்களை ஓட்டுபோட அனுப்பி வைப்பார்.
  • நீங்கள், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்கு சென்று உங்களுக்கு பிடித்த சின்னத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும்.
  • வாக்களித்து விட்டு வெளியே வரும்போது கையுறையை கழட்டி, அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, சானிடைசர் மூலம் கைகளை கழுவிவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே செல்ல வேண்டும்.
  • கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர் வாக்களிக்க வரும்போது கண்டிப்பாக பிபி கிட் உடை அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 3 அதிகாரிகளும் பாதுகாப்பு உடை அணிந்திருப்பார்கள்.
  • கொரோனா நோயாளிகள், கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது ஏப்ரல் 6ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான்கார்ட், வங்கி புத்தகம் உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!