விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனுடன் 2 ஆண்டுகளாக பழகி வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

கெளதம் கார்த்திக் மஞ்சிமா திருமணம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை நடிகர்கள் காதலில் விழுந்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் 90’ஸ் காலத்தில் முன்னணி கதாநாயகனாக கலக்கிய நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இவர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார்.

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!

அதன் பின் என்னமோ எதோ, வைராஜா வை, முத்து ராமலிங்கம், ரங்கோன், இவன் தந்திரன், ஹர ஹர மகா தேவ், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமான ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு மஞ்சிமா மோகனுடன் ஜோடி சேர்ந்து தேவராட்டம் படத்தில் நடித்தார். அதில் இருந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அதில் இருந்தே டேட் செய்து வருகின்றனர். அவர்கள் பழக தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் எதுவும் வெளியாகமல் இருந்தது.

கண்ணம்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடக்கப் போவது இதுதான் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் மஞ்சிமா FIR படத்தில் நடித்து இருக்கிறார். அதன் பாடல் வெளியிட்டு விழாவில் கௌதம் உடன் அவர் வந்து இருந்தார். மேலும் இவர்களது காதல் குறித்து இரண்டு தரப்பு பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகிற பிப் 14 காதலர் தினத்தில் அவர்களது திருமணம் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!