மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. 7வது முறையாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை – மக்கள் நிம்மதி!

0
மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. 7வது முறையாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - மக்கள் நிம்மதி!
மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. 7வது முறையாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - மக்கள் நிம்மதி!
மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. 7வது முறையாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை – மக்கள் நிம்மதி!

தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக வணிகர்கள் சற்று வேதனையில் இருந்தனர். இந்நிலையில் ரூ.2000க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை ரூ. 116 குறைந்து தற்போது ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது

கேஸ் சிலிண்டர் விலை குறைவு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களில் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. ஆனால் வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Exams Daily Mobile App Download

19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50 க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பின் படி ரூ. 116 குறைக்கப்பட்டு ரூ.1893க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்தது. தற்போது நிலைமை சரியான நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் நாளை (02.11.2022) மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் இதோ!

Follow our Instagram for more Latest Updates

அதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை 6 மாதங்களில் 6 முறை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 7வது மாதமும் 7வது முறை விலை குறைந்துள்ளது. அதன் படி வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1893க்கும், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இன்றி, ரூ. 1068க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!