Gail India நிறுவனத்தில் நேர்காணல் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,500/- ஊதியம்!
Gail India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Medical Professionals (Part Time Medical Consultant / Doctors) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Gail India Limited |
பணியின் பெயர் | Medical Professionals (Part Time Medical Consultant / Doctors) |
பணியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online / Offline |
Gail India Limited பணியிடங்கள்:
Medical Professionals பணிக்கு என Gail India நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 14 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Part Time Medical Consultant – 09 பணியிடங்கள்
- Full Time Doctors – 05 பணியிடங்கள்
Gail India பணிகளுக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Part Time Medical Consultant – MBBS, DM, MD, Diploma, MS, BDS
- Full Time Doctors – MBBS
Gail India பணிகளுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Gail India பணிகளுக்கான சம்பளம்:
- இந்த Gail India நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பின்வருமாறு சம்பளம் கொடுக்கப்படும்.
- Part Time Medical Consultant – ரூ.2,500/- முதல் ரூ.4,500/- வரை (ஒரு மணி நேரத்திற்கு)
- Part Time Medical Consultant (Sonologist) – ரூ.7,500/- (15 வருகைக்கு)
- Full Time Doctors (SDMO / GDMO) – ரூ.93,000/- (ஒரு மாதத்திற்கு)
Degree முடித்தவரா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
Gail India தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gail India விண்ணப்பிக்கும் முறை:
- SDMO / GDMO / Dentist பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 04.12.2023 அன்று முதல் 06.12.2023 அன்று வரை காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலுக்கு வரும் போது தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து உடன் கொண்டு வர வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.