நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் தொடக்கம்? ரயில்வே அதிகாரி விளக்கம்!!

0
நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் தொடக்கம்? ரயில்வே அதிகாரி விளக்கம்!!
நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் தொடக்கம்? ரயில்வே அதிகாரி விளக்கம்!!
நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் தொடக்கம்? ரயில்வே அதிகாரி விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் ரயில் சேவை முடக்கப்பட்டது. தற்போது நாட்டில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் வழக்கமான ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வே அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

ரயில் சேவை:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கியது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு மே மாதம் முதல் தக்க கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் முழு அளவிலான ரயில்கள் இயக்கப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நாட்டில் 66% ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருவதால் ரயில் போக்குவரத்து எப்போது வழக்கம் போல் முழுமையாக இயங்கும் என்று தொடர்ந்து வினவப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் ரயில்வே அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அவர் கூறியதாவது, நாட்டில் வழக்கம் போல் முழு அளவிலான ரயில்கள் வருகிற மே மாதம் முதல் தற்போது இயங்கி வரும் சிறப்பு ரயில்களுடன் சேர்த்து இயக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அதற்கு அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கொரோனா நிலவரத்தை கண்டறிந்து ஆராய்ந்த பிறகு தான் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here