தமிழகத்தில் மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி பள்ளிகள் திறப்பு! அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - நர்சரி பள்ளிகள் திறப்பு! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - நர்சரி பள்ளிகள் திறப்பு! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி பள்ளிகள் திறப்பு! அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது மார்ச் 2ம் தேதி வரை இன்னும் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 3ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்ட நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்பட்டது. இதற்கிடையில் பிப்ரவரி 15ம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மார்ச் 2 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.12) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப்போது, முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நிமித்தம் ஜனவரி 22 அன்று 30,744 ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்புகள் பிப்ரவரி 11 அன்று 3086 ஆக குறைந்துள்ளது.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!

மேலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. தவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த தளர்வுகளுடன் கூடிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பிப்.3 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!

தகுதியுள்ள அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர்களுக்காக சுத்திகரிப்பான்கள், உடல் வெப்ப நிலை பரிசோதனை ஆகியவை கையாளப்பட வேண்டும். அதே போல கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மார்ச் 2 வரை அமலில் இருக்கும். அந்த வகையில்,

 • சமூக, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
 • திருமணம் மற்றும் அதை சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் கலந்து கொள்ளலாம்.
 • இறப்பு நிகழ்வுகளில் 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
 • நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 • பொருட்காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here