கொரோனா பரவலால் மே 28 வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பால் பீதியில் மக்கள்!

0
கொரோனா பரவலால் மே 28 வரை முழு ஊரடங்கு - திடீர் அறிவிப்பால் பீதியில் மக்கள்!
கொரோனா பரவலால் மே 28 வரை முழு ஊரடங்கு - திடீர் அறிவிப்பால் பீதியில் மக்கள்!
கொரோனா பரவலால் மே 28 வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பால் பீதியில் மக்கள்!

சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் குறிப்பிட்ட நகரில் நேற்றில் இருந்து மே 28 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா தீவிரமடைவதை கட்டுப்படுத்த மக்கள் அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், தேவை ஏற்பட்டால் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தலைக்கவசம் கட்டாயம்!

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இரண்டு தவணையாக பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகளுக்கு பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைய துவங்கியது. ஆரம்பத்தில் சீனாவில் இருந்து தான் கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவியது. பின்பு சீனாவில் கொரோனா குறைந்து விட்டது. மற்ற நாடுகளில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா தொடர்ந்து கொண்டே இருந்தது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

நாளுக்கு நாள் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்றில் இருந்து மே 28 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தளங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் 30 சதவீதம் பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here