நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – சரியும் பொருளாதாரம்!

0
நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - சரியும் பொருளாதாரம்!
நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - சரியும் பொருளாதாரம்!
நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – சரியும் பொருளாதாரம்!

கடந்த ஒரு சில மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் சீனாவின் தொழில்துறை நகரமான ஷாங்காயின் பொருளாதாரம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 61.5% என்ற அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் புள்ளிவிவரப் பணியகம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

சீனாவின் வணிக மையமான ஷாங்காய் கடந்த மாதம் அதன் பொருளாதாரத்தில் ஒரு பரந்த சரிவை அறிவித்தது. அதாவது, கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நகரம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை கண்டது. அதே போல ஷாங்காயில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் முழு ஊரடங்கால் பல்வேறு இழப்பீடுகளை சந்தித்தது. இந்த நிலையில் ஷாங்காய் உற்பத்தியின் மையத்தின் பொருளாதாரம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 61.5% சுருங்கியது என்று உள்ளூர் புள்ளிவிவரப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்கள் ரத்து – இதுதான் காரணம்!

இது மார்ச் மாதத்தில் ஏற்பட்ட 7.5% வீழ்ச்சியை விட மோசமாக இருந்தது என்றும் குறைந்தபட்சம் 2011ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர சரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய், டெஸ்லா மற்றும் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் இன்டர்நேஷனல் கார்ப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஆலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சீனாவின் முக்கிய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 30% மற்றும் 40% வரை ஷாங்காயில் நடைபெறுகிறது. இப்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஷாங்காய் நகர மக்களை ஜூன் மாதத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

 

அந்த வகையில், அடுத்த மாதம் லாக்டவுன் நீக்கப்பட்டாலும், ஷாங்காய் நகர மக்கள் வெளிநாட்டுப் பயணத் தடைகள் மற்றும் ஓமிக்ரான் விரிவடையும் அபாயம் ஆகியவற்றின் நிச்சயமற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஷாங்காயின் சில்லறை விற்பனை 48.3% அதிகரித்துள்ளது. இது தேசிய அளவில் ஏற்பட்ட 11.1% வீழ்ச்சியை விட கணிசமாக உள்ளது. அதே போல ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 30%க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், நான்கு மாத தரவுகளின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் கணக்கீடுகள் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் விற்பனை 88% சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here