நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

0
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

நாட்டின் பல பகுதிகள் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பத்தின் கீழ் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் காலம் மே 4ம் தேதி தொடங்கி உள்ளது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. மேலும் இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நாளாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான ஏப்ரல் மாதத்தை எதிர்கொண்டன. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து மூன்று ஐரோப்பிய நாடுகளில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வெப்பநிலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exams Daily Mobile App Download

தலைநகர் டெல்லியின், சில பகுதிகளில் புதன்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணியின் கணிப்புப்படி, மே 7ம் தேதிக்குப் பிறகு வெப்ப அலை திரும்பக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், அதிக வெயில் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதிக்கப்படுவதால் அவர்கள் நலன் கருதி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here