மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மே 28 வரை ஊரடங்கு அமல்! அரசு அறிவிப்பு!

0
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - மே 28 வரை ஊரடங்கு அமல்! அரசு அறிவிப்பு!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - மே 28 வரை ஊரடங்கு அமல்! அரசு அறிவிப்பு!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மே 28 வரை ஊரடங்கு அமல்! அரசு அறிவிப்பு!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 மாவட்டங்களின் பொதுமக்கள் மே 28 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் முகக்கவசம் கட்டாயம்! அரசு முக்கிய அறிவிப்பு!

உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தததை அடுத்து அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனா, ஆஸ்திரியா, உள்ளிட்ட நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து கொரோனாவின் பிறப்பு நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பீஜிங்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து இடங்களும், உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிங்கின் சாவோயாங், பெங்தை, சன்யி மற்றும் பங்ஷான் உள்ளிட்ட 5 மாவட்ட குடியிருப்புவாசிகள் 28 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here