நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாட்டில் பல நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் தலைநகரில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருவதால் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சீன அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மேலும் இது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதற்கெதிராக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இது பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுகிறது. அத்துடன் தற்போது முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பரவியுள்ளது. அத்துடன் தற்போது 4ம் அலை பரவ உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இங்கு ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலே இங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. சீனாவில் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பேரலை வேகமாக பரவி வருகிறது. மேலும் இதில் குறிப்பாக ஷாங்காய் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று சீன அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.