தமிழகத்தில் ஜன.15க்கு பிறகு மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – பொதுமக்கள் அச்சம்!

0
தமிழகத்தில் ஜன.15க்கு பிறகு மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு - பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் ஜன.15க்கு பிறகு மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு - பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் ஜன.15க்கு பிறகு மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு பின் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

முழு ஊரடங்கு அமல்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு உடல் சேதாரம் ஒரு பக்கம் என்றால், கொரோனாவால் தப்பித்தவர்களுக்கு பொருளாதார சேதாரம் மறுபக்கம். இப்படி மக்களை ஆட்டிப்படைத்த இந்த கொரோனா வைரஸ் தாக்கம் 2 மாதங்களுக்கு முன் குறைந்தது. அதனால் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.

ஜனவரி 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை, 11 & 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி – மாநில அரசு உத்தரவு!

உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் மற்ற இரண்டு அலைகளில் பரவியது போல இல்லாமல் அதிகம் வீரியமாக இருக்கிறது. அதனால் ஒரே மாதத்தில் பல நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 100க்கு அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2 நாட்களுக்கு முன் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது, தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. அதனால் கடை வீதிகளில் கூட்டம் பெருமளவில் கூடும், காணும் பொங்கலுக்கு சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் வருவார்கள், மாட்டுப் பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

இந்நிலையில் நகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த நேரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும். அதனால் பொங்கல் பண்டிகைக்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here