ஏப்ரல் 3ம் தேதியன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்? அதிகாரிகள் விளக்கம்!
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் (ஏப்ரல் 3) ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது கலவரமாக மாற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க ஈடுபட, இக்கலவரம் வன்முறையாக மாறியது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!
இந்த வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து காவல்துறை தற்போது தகவல் அளித்துள்ளது. இது குறித்து காவல்துறை அதிபர் அஜித் ரோஹண கூறுகையில், ‘ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு மார்ச் 31ம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை ஏப்ரல் 3 ஆம் தேதியன்றும் அமல்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இதுவரை நடந்த வன்முறையில் ஐந்து போலிசார் காயமடைந்துள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அமைதியின்மை தொடர்பாக இதுவரை 54 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.