இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் தொற்று பரவலை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறார்.
கொரோனா:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதாவது, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமெனவும், அப்படி பொது இடங்களுக்கு செல்ல நேரிடும் சமயத்தில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டதா? எளிய வழிமுறைகள்!
கொரோனா பரவலினால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கொரோனா இரண்டு தவணையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. உலகம் முழுவதும் 91.5 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசியை 74.75 சதவீத மக்கள் செலுத்தியுள்ளனர். இந்த காரணத்தினால் மட்டுமே அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது.
Exams Daily Mobile App Download
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாடத் துவங்கினர். இந்நிலையில் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.