நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!

0
நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!
நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!
நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் அந்நாட்டு எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸானது அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து மேலும் பாதிப்புகளை எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. அதனால் அனைத்து நாட்டு அரசுகளும் பொது மக்களை தொற்றில் இருந்து காக்க தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்ததடுத்த கொரோனா அலைகள் பரவி உயிரிழப்பை அதிகப்படுத்தியது. அதனால் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

IPL 2022: சன்ரைசர்ஸ் அணியின் நியூ ஜெர்ஸி இன்று வெளியீடு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுக்க தொடங்கியது. ஓரளவு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி இருப்பதால் இந்த ஓமிக்ரான் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சில கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

பிப்ரவரி 21ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும். சுற்றுலா பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here