இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் – முழு பட்டியல் இதோ!

0
இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் - முழு பட்டியல் இதோ!
இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் - முழு பட்டியல் இதோ!
இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் – முழு பட்டியல் இதோ!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் நிலைமை மேம்பட்டு வருவதால், ஒமிக்ரான் மாறுபாட்டால் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு நீக்கம்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனுடன் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், போக்குவரத்து மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல பொதுவான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் நாடு முழுவதும் தற்போதைய தொற்றுநோய் நிலைமை மேம்பட்டு வருவதால், சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!

இருப்பினும், ஒரு சில மாநிலங்களில் மட்டும் இரவு நேர இயக்கம் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் நேற்று (பிப்.14) ஒரு நாளில் 27,409 புதிய கொரோனா பாதிப்புகளுடன் தினசரி நேர்மறை விகிதம் 2.23% என பதிவாகியுள்ளது. இப்போது மகாராஷ்டிராவில், இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் மும்பை உட்பட 11 மாநகராட்சிகளுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் இரவு போக்குவரத்துக்கு இனி எந்த தடையும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர நகரத்தில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் இப்போது வழக்கமான நேரப்படி திறந்திருக்கும். அதே போல உணவகங்கள் மற்றும் திரையரங்குகளை அவற்றின் வழக்கமான நேரப்படி 50% திறனில் தொடர்ந்து செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்பான விதிமுறைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இது தவிர பீகார் அரசாங்கம், கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த இரவு நேர கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநில அரசுகளும் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளன. இருப்பினும், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு முழுமையாக திரும்ப பெறப்படவில்லை. ஆனால் உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!