மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – ஜூலையில் வருமா? முழு விவரம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - ஜூலையில் வருமா? முழு விவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - ஜூலையில் வருமா? முழு விவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – ஜூலையில் வருமா? முழு விவரம்!

7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நல்ல செய்தி ஓன்று உள்ளது. அதாவது மத்திய அரசு அடுத்த மாதம் ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி 4% உயர்வு:

மத்திய அரசு வழக்கமாக 7வது ஊதியக் குழுவின் கீழ், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதல் டிஏ உயர்வு வழக்கமாக ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும், இரண்டாவது விலை உயர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR ஐ மத்திய அரசு 3% உயர்த்தியது. அதனால் 50 லட்சத்துக்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் அடுத்த DA மற்றும் DR ஐ அரசு 3% உயர்த்தும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ஊடக அறிக்கையின்படி, அடுத்த டிஏ உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு ஜூலை 2022 இல் வரக்கூடும், இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ தவிர, லட்சக்கணக்கான மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் அரசாங்கம் அதிகரிக்கலாம் என தகவல்கள் கூறுகிறது. DA உயர்வு அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2022 மாதங்களில், AICPI புள்ளி விவரம், 125.1, 125 மற்றும் 126 ஆக இருந்தது.

மீனாவிடம் பணம் வாங்கி கடன் அடைத்த ஜீவா, கோவத்தில் வார்த்தைகளை விட்ட ஜனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஊடக அறிக்கையின்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் AICPI 126 க்கு மேல் இருந்தால், ஊழியர்களின் DA 4% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ எண்கள் இன்னும் வரவில்லை. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 34% ஆக உள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் 38 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழியர்களின் சம்பளமும் அதிக அளவில் உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here