ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

0
ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

தற்போது துவங்கி இருக்கும் ஜூன் மாதத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான பள்ளி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு, இப்போது பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை பல்வேறு மாநிலங்களிலும் மீண்டுமாக துவங்கி இருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் திறக்கப்பட இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜூன் மாத நடுப்பகுதி அல்லது இறுதிக்குள் பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் இனி கிடையாது – கல்வித்துறை திடீர் விளக்கம்! ஆசிரியர்கள் அதிர்ச்சி!

இதற்கிடையில், கொரோனா தொற்று வழக்குகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் இந்த சூழல் பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளி நிர்வாகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஜூன் 15ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தற்போது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா வழக்குகள் அதிகரித்த போதிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு பள்ளிகளை சரியான நேரத்தில் திறக்க அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் 15 அன்று மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. இது குறித்த அறிக்கையின்படி, பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது தவிர மற்ற அனைத்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஜூன் 13 முதல் போபாலில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஜூன் 13 முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும். மறுபுறம், ஜூன் 15 முதல் இந்தூரில் புதிய வகுப்புகள் தொடங்க இருக்கிறது. இப்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் சூழலிலும் 1 முதல் 10ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23, 2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜூன் 6 முதல் கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தப்படுத்துவதையும் கட்டாயமாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!