SBI கவாச் லோன் : ரூ.5 லட்சம் வரை பெறலாம், 3 மாதங்களுக்கு EMI விலக்கு! முழு விபரம் இதோ!

0
SBI கவாச் லோன் : ரூ.5 லட்சம் வரை பெறலாம், 3 மாதங்களுக்கு EMI விலக்கு! முழு விபரம் இதோ!
SBI கவாச் லோன் : ரூ.5 லட்சம் வரை பெறலாம், 3 மாதங்களுக்கு EMI விலக்கு! முழு விபரம் இதோ!
SBI கவாச் லோன் : ரூ.5 லட்சம் வரை பெறலாம், 3 மாதங்களுக்கு EMI விலக்கு! முழு விபரம் இதோ!

SBI வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வரும் கொரோனா சிகிச்சைக்கான ரூ.5 லட்சம் வரையிலான கடன் சேவையில், முதல் 3 மாதங்களுக்கும், கடன் காலம் முடிந்தவுடன் 3 மாதங்களுக்கும் EMI செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது.

கடன் சலுகை

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வரும் சில முக்கிய கடன் திட்டங்களில் சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் SBI வங்கியில் எந்தவொரு கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஏதாவதொரு விதத்தில் உதவும் வகையில் இப்படிப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் வங்கியின் ஆன்லைன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா, தீவிரமாகும் ஊரடங்கு? அதிகாரிகள் விளக்கம்!

அதே நேரத்தில் கொரோனா சிகிச்சைக்கான செலவினங்களை பகிர்ந்தளிக்கும் வகையில், குறைந்த அளவு வட்டியுடன் கடன் திட்டத்தையும் அளிக்கிறது. அதன் கீழ் ‘கவச் லோன்’ என்ற பெயரில் கொரோனா சிகிச்சைக்காக ரூ .5 லட்சம் வரை கடன் பெறும் சேவைகள் SBI வங்கி நிர்வாகம் வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருக்கும் இந்த கடன் சேவையை சம்பளதாரர்கள் , சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவரும் பெற்றுக் கொள்ள தகுதியுடையவகள் ஆவர்.

TN Job “FB  Group” Join Now

இதற்காக சொத்து உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை டெபாசிட் செய்ய தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் அல்லது குடும்பம், குறைந்த பட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். கடனுக்கான வட்டி விகிதங்கள் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டம் தரும் சலுகை என்னவென்றால், கடன் வாங்கியவர்கள் முதல் 3 மாதங்கள் மற்றும் கடன் காலம் முடிந்த 3 மாதங்களுக்கும் EMI செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!