Airtel வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் – முழு விவரம்!!

0
Airtel வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் - முழு விவரம்!!
Airtel வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் - முழு விவரம்!!
Airtel வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் – முழு விவரம்!!

ஏர்டெல் தனது கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பயனர்களுக்காக ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக 5G நெட்வொர்க் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம்:

நாடு முழுவதும் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்த விலையில் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் தனது கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பயனர்களுக்காக ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 5 ஜி-தயார் நெட்வொர்க் மற்றும் சிறந்த டிஜிட்டல் முதல் வாடிக்கையாளர் பராமரிப்பு போன்றவற்றில் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்க தடை – திருச்சி மண்டல IG உத்தரவு!

ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் மூலமாக 40 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், 1 வருடத்திற்கான ஷா அகாடமி மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.499 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் மூலமாக 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்ற அனைத்தும் ஒரே மாதிரி சேவைகள் தான் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரூ.999 குடும்பத் திட்டத்தை (1 + 2 ஆட் ஆன்) இந்த நிறுவனம் வழங்குகிறது. இதில் மொத்தம் 210 ஜிபி டேட்டா இருக்கும். முதல் இணைப்பு, 150 ஜிபி டேட்டாவை பெறும். மற்ற இரண்டு இணைப்புகள், 30 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைம் (ஒரு வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (ஒரு வருடம்), விஐபி சேவை, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி போன்ற சலுகைகளும் வழங்கப்படும். கூடுதலாக ஏர்டெல், ரூ.1,599 குடும்ப திட்டத்தையும் (1 + 1 ஆட் ஆன்) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

அதாவது, நீங்கள் 500 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். வழங்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், அதன் வேகம் 128 கே.பி.பி.எஸ்-ஆகக் குறையும், அதனுடன் அமேசான் பிரைம் (1 வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (1 வருடம்), விஐபி சேவை, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி ஆகிய மற்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் எந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் சிம் ஒன்றுக்கு ரூ.299 செலுத்தி ஒரு இணைப்பைச் சேர்க்கும் option வழங்கப்படுகிறது. இந்த விலைக்கு 30 ஜிபி கூடுதல் டேட்டா (முன்பு 10 ஜிபி), அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தேங்க்ஸ் வசதிகள் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமில்லாமல் ரூ.299க்கு அடிப்படை திட்டத்தை வழங்குகிறது. இதில் 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும். ஏர்டெல் கால் மேனேஜர், விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் ஷா அகாடமிக்கு 1 வருடம் இலவசம் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. ரூ 349 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம், 40 ஜிபி டேட்டாவை அளிக்கிறது மற்றும் மீதமுள்ள நன்மைகள் முந்தைய திட்டத்தைப் போலவே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமும் உள்ளது. அதில் 60 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் டிரேஸ்மேட், கூகுள் ஒர்க்ஸ்பேஸ், ஏர்டெல் அழைப்பு மேனேஜர், அமேசான் பிரைம் (1 வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (1 வருடம்), விஐபி சேவை மற்றும் ஏர்டெல் செக்யூர், இலவச விங்க் மியூசிக் ஆப் பிரீமியம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் உறுப்பினர் மற்றும் ஷா அகாடமி அணுகல் போன்ற பிற நன்மைகள் வழங்கப்படுகிறது. ரூ.499 மற்றும் ரூ.1,599 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் மூலமாகவும் இந்த அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!