ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – MSL குறித்த முழு விபரம் இதோ!

0
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - MSL குறித்த முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - MSL குறித்த முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – MSL குறித்த முழு விபரம் இதோ!

பொதுமக்கள் பலரும் ரயில் போக்குவரத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் உள்ள மஞ்சள் நிற பலகையில் ஏன் MSL என்கிற குறியீடு இருக்கிறது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

MSL குறியீடு:

உலகில் போக்குவரத்துத் துறைகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் ரயில் போக்குவரத்தை தான் அதிகமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். ரயில் போக்குவரத்தில் செலவும் குறைவு, பாதுகாப்பையும் உறுதிப்படுத்தலாம் என்பதால் ரயில் போக்குவரத்தை தான் அதிகமாக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் மஞ்சள் நிறத்தில் ஒரு பலகை முன்வைக்கப்பட்டிருக்கும். யாராவது கவனித்திருக்கிறீர்களா. அந்த மஞ்சள் நிற பலகையில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழி என மொத்தமாக மூன்று மொழிகளில் அந்த ஊரின் பெயர் எழுதப்பட்டு இருக்கும்.

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள புதிய திட்டம்!

அதாவது தமிழ்நாடு என்றால் தமிழிலும், கர்நாடகா என்றால் கன்னடத்திலும், கேரளா என்றால் மலையாளத்திலும், ஆந்திரா என்றால் தெலுங்கிலும் அந்த பலகையில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். எதற்காக மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிற பெயின்டில் பெயரை எழுத வேண்டுமென்றால் தூரத்திலிருந்து பார்த்தாலும் கூட கருப்பு நிறத்தில் மஞ்சள் பலகையில் பெயர் எழுதப்பட்டிருந்தால் அந்த பெயர் கண்ணுக்கு நன்றாக புலப்படும். அதனால்தான் மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிறத்தை வைத்து எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த பலகையில் MSL என்கிற குறியீடு இருக்கும். ஆனால் பலரும் இந்த பலகையை பார்த்துவிட்டு சாதாரணமாக விட்டிருப்போம்.

Exams Daily Mobile App Download

எம்எஸ்எல் (MSL) என்பது Mean Sea Level என்பதாகும். கடல் மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பதை தான் MSL குறிப்பிடுகிறது. ரயில் ஓட்டுனர்கள் மற்றும் கார்டுகள் இந்த MSL மதிப்பீட்டை அறிந்துகொண்டு எவ்வளவு உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து அதற்கேற்ப ரயிலின் வேகத்தை ரயில் ஓட்டுனர்கள் கட்டுப்படுத்த முடியும். இந்த குறியீடு மூலமாக தான் ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!