அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முழு விவரங்கள் இதோ!

0
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முழு விவரங்கள் இதோ!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முழு விவரங்கள் இதோ!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளில் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்தது. ஆனால், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தபட்டு வந்தது. அதே போலவே கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொது மக்கள் பலரும் பொருளாதார நெருக்கடியில் இருந்த காரணத்தால், பலரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகள் மற்றும் அரசின் உதவி பெற்று வரும் பள்ளிகளில் சேர்த்தனர். தமிழக அரசும் பெற்றோர்களின் மனநிலை அறிந்து பல வித சலுகைகள் மற்றும் நன்மைகளை அமைத்து தந்தது.

ஜூன் 1ம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த கல்வி ஆண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதே போல மேல்நிலை பயில இருக்கும் மாணவர்களுக்கும் ஜூன் 13ம் தேதி அன்றே சேர்க்கை நடைபெற இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த கல்வி ஆண்டிற்காக 10 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பினருக்கு வரும் ஜூன் 13ம் தேதி, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதி, 12ம் வகுப்பினருக்கு ஜூன் 20ம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெற்றோர்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here