Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வி போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல கூடுதல் நன்மைகளுடன் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

திட்டங்கள்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் தொலைபேசி இணைப்பு அவசியமாகியுள்ளது. மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இணையத்தின் மூலம் அதிகரித்துள்ளது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மக்களுக்கு அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வி ஆகியவை தினசரி 2 ஜிபி டேட்டா உடன் கூடுதலாக பல நன்மைகளையும் வழங்கி வருகின்றது. இதற்கான பல கட்டண முறையிலான திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மற்றும் வின்க் மியூசிக் ஆகியவை இலவசமாக கிடைக்கிறது. மேலும், ரூ .150 கேஷ்பேக் ஃபாஸ்டேக்கில் வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டிற்கான அணுகல் வழங்கப்படுகிறது. ஏர்டெல் தாங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ .50 தள்ளுபடி மற்றும் 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ .249 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான நன்மைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

Vi ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டம் டபுள் டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் வார இறுதி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்குகிறது. வீ மூவிஸ் மற்றும் டிவி அணுகல் மற்றும் ZOMATO ஆப் மூலம் உணவு ஆர்டர்கள் மீது சலுகை மற்றும் மற்றும் MPL இல் தினசரி ரூ. 75 தள்ளுபடி மற்றும் விளையாட ரூ. 125 போனஸ் தொகை வழங்கப்படுகிறது.

44 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் டபுள் டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டியில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கபடுகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இரவு முழுவதும் இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ .444 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ செயலிகளுக்கு ஒரு இலவச சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றிற்கான இலவசசந்தாவையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்:

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் 250 நிமிட கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. கூடுதலாக PRBT ஐ வழங்குகிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

பிஎஸ்என்எல் ரூ.447 திட்டம்:

பிஎஸ்என்எல் ன் இந்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இது 100 ஜிபி டேட்டாவை அதிக வேகத்தில் கொடுக்கிறது. அதன்பிறகு இணையத்தின் வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதில், அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. கூடுதலாக பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் போன்றவற்றுக்கான சந்தாவை வழங்குகிறது.

ஜியோ ரூ 599 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

Vi ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த ப்ரீபெய்ட் திட்டம் டபுள் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 4 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் வழங்கப்படுகிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும்,
கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வார இறுதி ரோல்ஓவர் டேட்டா வசதியும் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!