OLA Electric Scooter 2 மாடல்களில் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம்!

0
OLA Electric Scooter 2 மாடல்களில் அறிமுகம் - விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம்!
OLA Electric Scooter 2 மாடல்களில் அறிமுகம் - விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம்!
OLA Electric Scooter 2 மாடல்களில் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம்!

மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் மற்ற அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஓலா மின்சார ஸ்கூட்டர்:

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை காரணமாக மின்சார வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் புதுப்புது அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, மைலேஜ் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கேட்ட மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு – தினசரி 15,000 பக்தர்களுக்கு அனுமதி!

இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு முதல் 24 மணி நேரத்தில் 100,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த ஸ்கூட்டர் பெற்றது. ஓலா எலக்ட்ரிக் (Ola Electric Scooter) நிறுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகளை சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) S1 என்ற பேஸ் வேரியண்ட், S1 Pro என்ற உயர் ரக வேரியண்ட் என இரு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேரியண்ட்களுமே ரைடிங் மோட்களின் எண்ணிக்கை, ஃபெர்பார்மன்ஸ், மைலேஜ், கலர்கள் என மாறுபட்டிருக்கின்றன.

முழு விவரம்:

S1 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும். இதன் மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ ஆக உள்ளது. நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டி விடலாம். 2.98 kWh திறனுள்ள பேட்டரி, 5 வண்ணங்களில் இந்த ஸ்கூட்டரை பெறலாம். இந்த மாடலின் எடை 121 kg ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 4.48 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 99,999 ஆகும்.

S1 Pro மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆக உள்ளது. மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ ஆகவும் உள்ளது. நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டி விடலாம். 3.97 kWh திறனுள்ள பேட்டரி, 10 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 125 kg ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 6.30 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 1,29,999 ஆகும்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஸ்கூட்டரை EMI-ல் வாங்கும் வசதியையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வண்டியை வாங்குவோருக்கு 400 நகரங்களில் சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும். இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக, நிறுவனம் 400 நகரங்களில் 1,00,000 க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைபர் சார்ஜிங் மையங்களை (Hyper charging Points) அமைக்கும். இதனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சார்ஜ் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது.

சார்ஜ் பாயிண்டு அமைக்கப்பட்ட நகரங்களின் விவரங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளை 500 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படும். இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஓசூரில் உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு நேரடியாக அவர்களது வீட்டிற்கே வண்டி டெலிவரி செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!