TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வரும் மாதங்களில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை நடத்த இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதற்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு

தமிழக அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் கிளார்க் பணி துவக்கி குரூப் தேர்வுகள் வரையுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் TNPSC ஆணையம் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்க தமிழகத்தில் கொரோனா பேரலையால் தடைப்பட்ட அனைத்து விதமான தேர்வுகளையும் நடத்துவதற்கு முடிவு செய்த TNPSC தேர்வாணையம் அதற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அதன்படி குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அந்த வகையில் 7382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை செலுத்துவதற்கு கடைசி தேதி ஏப்ரல் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விண்ணப்ப செயல்முறைகளை முடித்து தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் குரூப் 4 தேர்வர்கள் எந்த பாடங்களை படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும், தேர்வுக்கான பாடத் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த சில தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு முறை:

  • இத்தேர்வு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது.
  • இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
  • ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.
  • அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) இருக்கும்.

பாடத்திட்டம்:

  • முதல் பகுதி – தமிழ் மொழித் தகுதித் தேர்வு.
  • இதில் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக தமிழ் மொழிப் பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் வரும்.
  • பொது அறிவுப் பகுதியில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் பொது அறிவு வினாக்கள் -75, திறனறி தேர்வு – 25 என கேள்விகள் கேட்கப்படும்.

அறிவியல் – இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் – வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.

புவியியல் – புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவ காற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் உள்ளிட்டவை.

வரலாறு – சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.

இந்திய அரசியல் – அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.

பொருளாதாரம் – ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் வணிக வளர்ச்சி

இந்திய தேசிய இயக்கம் – தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் உள்ளிட்ட பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.

திறனறி வினாக்கள்:

இப்பிரிவு தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தை கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத் தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டு வட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

குறிப்பு:

குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை  தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!