தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

0
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. புதிதாக ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க மற்றும் நீக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை பயன்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

புதிய ரேஷன் கார்டு:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை முதலான ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கும் ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. மேலும் அவ்வப்போது ரேஷன் கார்டில் விவரங்களை அப்டேட் செய்தபடி இருக்க வேண்டும். அதாவது வீட்டு முகவரி, வயது விவரம் என அனைத்தையுமே பிழையில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஏப்ரல் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

புதிதாக திருமணமானவர்கள் கட்டாயமாக தங்களது பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் மற்றும் புதிய ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கும் போது பழைய ரேஷன் கார்டில் இருந்த பெயரை நீக்கிவிட வேண்டும். மேலும், புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயர் குறித்தான அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும். புதிதாக ரேஷன் கார்டில் பெயரை இணைத்தல் மற்றும் நீக்குதல் என அனைத்தையுமே ஆன்லைன் மூலமாகவே செய்துகொள்ளலாம்.

ரேஷன் கார்டில் பெயரை இணைக்க முதற்கட்டமாக ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம். ஆதார் அட்டையில் அப்டேட் செய்த பிறகு புதிய ஆதார் அட்டையை ஆவணமாக சமர்ப்பித்து பெயரை இணைத்துக்கொள்ளலாம். https://tnpds.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று பெயரை சேர்த்தல், நீக்குதல் என அனைத்து தேவைகளையும் செய்துகொள்ளலாம். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் 1967 அல்லது 1800-425-5901 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!