ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைனில் விபரங்களை மாற்றுவது எப்படி?
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை தேவை எனில் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். ஆன்லைன் மூலமாகவே இந்த வேலையை எளிதாக செய்யலாம். எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்குகிறது. அரசுத்துறை, தனியார்துறை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. இந்த ஆதாரை நாம் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். அதற்கான வசதியை UIDAI அமைப்பு நமக்கு வழங்கி வருகிறது. தற்போது ஆதார் எண் அவசிய ஒன்றாக உள்ளதால் அதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.
TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதாவது முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைந்திருப்பது கட்டாயமாகும். தற்போது ஆதாரில் விவரங்களை வீட்டிலிருந்தபடியே எளிதாக மாற்றலாம்.
மேலும் புதிய ஆதார் கார்டையும் ஆன்லைன் மூலமாக பெறலாம். . அதாவது UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அதை டவுன்லோட் செய்யலாம். தற்போது ஆதாரில் விவரங்களை மாற்றுவது குறித்து பார்ப்போம்.
ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும் முறைகள்:
- முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ஆதார் சேவை பிரிவில், சுய சேவை புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்து கேப்ட்சா குறியீட்டை பதிவிட வேண்டும்.
- மற்ற விவரங்களை உள்ளிட்டு, ஓடிபி உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து மொழியைத் தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவும்.
Exams Daily Mobile App Download
- அதன் பிறகு மீண்டும் ஓடிபி வரும், அதை உள்ளிட்டு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- மேற்கண்ட செயல்களுக்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே தேவைப்படும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்