TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்!

0
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்!
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்!
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 21 ஆம் தேதி திட்டமிட்டபடி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் வெளியாகி உள்ளது. இந்த விடைத்தாளை தேர்வர்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு (tnpsc group 2 notification) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில், தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி, குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல என தெரிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை (TNPSC Group 2 Answer Key 2022) அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in -யில் மே 27  அன்று வெளியிட்டது.

Exams Daily Mobile App Download

எனவே குரூப் 2 தேர்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம். ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை டவுன்லோடு செய்வது எப்படி:

  • TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – செல்லவும் – http://www.tnpsc.gov.in
  • பின்பு ஆன்சர் கீ லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் விவரங்களை உள்ளிடவும்
  • இப்போது TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் ஆன்சர் கீ 2022 ஐ டவுன்லோட் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!