மகளிருக்கான பிங்க் பேருந்துகளில் விளம்பரங்கள் – போக்குவரத்து துறை விளக்கம்!

0
மகளிருக்கான பிங்க் பேருந்துகளில் விளம்பரங்கள் - போக்குவரத்து துறை விளக்கம்!
மகளிருக்கான பிங்க் பேருந்துகளில் விளம்பரங்கள் - போக்குவரத்து துறை விளக்கம்!
மகளிருக்கான பிங்க் பேருந்துகளில் விளம்பரங்கள் – போக்குவரத்து துறை விளக்கம்!

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்துகளில் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பிங்க் நேர பேருந்துகளில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரமும் பொறிக்கப்பட்டு வருகிறது.

பிங்க் பேருந்து:

தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை எளிமையாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த பேருந்துகளில் மட்டும் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக 50 மாநகர பேருந்துகளில் முன்பும், பின்னும் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. முன்னும் பின்னும் மட்டும் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டதால் பல விமர்சனங்களுக்கு ஆளானது. இந்நிலையில், எதற்காக முன்னும் பின்னும் மட்டும் பெயிண்ட் அடிக்கப்பட்டது என்பது குறித்து போக்குவரத்து துறை விளக்கமளித்திருந்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய செயலி அறிமுகம்!

அதாவது, இலவச பேருந்துகளில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரம் இடம்பெற அனுமதி வழங்கப்பட்டது. பேருந்துகளின் பக்கவாட்டில் விளம்பரம் இடம்பெற வேண்டும் என்பதற்காக தான் முதற்கட்டமாக முன்னும் பின்னும் பிங்க் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகளில் விளம்பரங்களை பொறிப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விளம்பரங்களின் மூலமாக போக்குவரத்து கழகங்களின் வருவாய் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக 2 மாநகர இலவச பேருந்துகளில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. இதற்கு இடையே, சாதாரண கட்டண பேருந்துகளை இலவச பேருந்துகளாக இயங்குவதாகவும் புகார் எழுந்தன. இது போன்ற புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே இது போல பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரங்களுடன் பிங்க் நிற பேருந்துகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!