இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ரம்ஜான் கொண்டாட தடை!

0
இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - ரம்ஜான் கொண்டாட தடை!
இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - ரம்ஜான் கொண்டாட தடை!
இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ரம்ஜான் கொண்டாட தடை!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று நடைபெற்ற மத கலவரத்தையடுத்து, இன்றும் நாளையும் (மே. 2,3) கொண்டாடப்பட இருக்கும் ரம்ஜான் பண்டிகைக்கு தடை விதித்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதியன்று ராமநவமி பண்டிகையை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் நகரத்தில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட இந்த சம்பவம் மிகப்பெரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இந்த கலவரத்தில் அப்பாவி மக்களின் வீடுகள், வாகனங்கள் எரிந்து சேதமாகியதுடன் போலீசாரும் தாக்கப்பட்டனர். இப்போது கார்கோன் நகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், கடந்த 3 வார ஊரடங்கிற்கு மத்தியில், மாவட்ட நிர்வாகம் ஒரு நாளைக்கு 4 மணிநேரம் மட்டும் தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் கார்கோனில் இன்று (மே.2) மற்றும் நாளையும் (மே.3) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரமலான் நோன்பு நிறைவடைந்து இன்று (மே 2) அல்லது மே 3ம் தேதியன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் அருண் பிரசாத் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வரும் நிலையில், கார்கோன் மாவட்டத்தில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, பண்டிகையினால் ஏற்படும் வன்முறையை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்கோனில் உள்ள இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!