மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் – அரசின் முக்கிய உத்தரவு!

0
மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் - அரசின் முக்கிய உத்தரவு!
மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் - அரசின் முக்கிய உத்தரவு!
மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் – அரசின் முக்கிய உத்தரவு!

கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது தான் திரும்ப பெறப்பட்டு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த சமயத்தில், கர்நாடக மாநிலம் ஹுபள்ளியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஹுபள்ளியில் சர்ச்சைக்குரிய சம்பவம் காரணமாக இந்த ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்த நகரில் உள்ள காவல்துறை வாகனங்கள், மருத்துவமனை, ஹனுமன் கோயில் ஆகியவை சூறையாடப்பட்டன.

ஊரடங்கு அமல்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களில் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து நிலை சீராகி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹுபள்ளி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கிற்கு காரணம் என்னவென்றால், ஹுபள்ளியில் சா்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவால் ஏற்பட்ட வன்முறை தான். கா்நாடக மாநிலம் ஹுபள்ளியைச் சோ்ந்த அபிஷேக் ஹிரேமத் (20). மசூதி மீது காவிக்கொடி இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்து கோவம் அடைந்த, குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முடிவு?

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அபிஷேக் ஹிரேமத்தை சனிக்கிழமை கைது செய்தனா். அபிஷேக் ஹிரேமத்தை வழக்கு பதிவு செய்து, கைது செய்த பின்னரும் காவல் நிலையம் அருகே அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டனர். அப்போது காவல் துறையினா் அவா்களைத் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார், இதையடுத்து அந்தக் கூட்டத்தைச் சோ்ந்த சில முக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடா்பாக காவல் துறையினா் விளக்கம் அளித்தனர். இருப்பினும் காவல் துறையின் விளக்கத்தை ஏற்காமல், காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்தவா்கள், கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை காரணமாக காவல் துறையைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா். சில காவல் துறை வாகனங்கள் சேதமடைந்தன.

இது மட்டுமல்லாமல் அருகில் உள்ள மருத்துவமனை, அனுமன் கோயிலையும் வன்முறையாளர்கள் சூறையாடினர். இந்த வன்முறைக்கு காரணமான 40 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால் அந்த நகர மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இதனால் ஹுபள்ளி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஹுபள்ளி-தாா்வாட் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இது திட்டமிட்ட தாக்குதல். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் மற்றும் அரசியல் சாயம் பூச வேண்டாம். இதை சட்டம் ஒழுங்கு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here