ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் மாநில அளவிலான இரவு நேர ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஜூன் 30 முதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு

அருணாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள கொரோனா பாதிப்புகளின் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சில மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாலும், ஒட்டுமொத்த பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீட்டிப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை – இன்று முதல் கட்டாயம்!

அதன் படி ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர சேவைகள், சுகாதாரம், நீர், மின் உற்பத்தி, விநியோக சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ரெஸ்டாரன்ட்கள், தாபாக்கள் மற்றும் பிற உணவகங்களும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

அனைத்து வகையான பொது போக்குவரத்தும் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்ஸிகள் இரண்டு பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை மூடப்பட்டிருக்கும். அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். மருத்துவமனைகள், மருந்துகள், விலங்கு பராமரிப்பு மையங்கள் மற்றும் கால்நடை கிளினிக்குகள் அத்தியாவசிய தேவைகளுக்காக செயல்படலாம். சுற்றுலா தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here