கிராமம் முழுதும் முழு ஊரடங்கு அமல் – அடுத்தடுத்து 5 பேர் பலி!
பேய் சம்பந்தமான சினிமா படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில்ஆவிகள் சூழ்ந்துள்ளதால், அவற்றை விரட்ட பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக கிராமத்தை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
முழு ஊரடங்கு அமல்:
கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதை கைவிட்டு விட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இதனால் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்குவருமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கிற்கு காரணம் கொரோனா பரவல் இல்லை, அந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் இறந்து உள்ளதாகவும் கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்திற்குப் பிறகான முதல் இன்டர்வியூவில் கலந்துகொண்ட ஆரியன் & ஷபானா – வைரலாகும் வீடியோ!
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஏற்கனவே பேய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து 5 பேர் இறந்து உள்ளனர். இந்த இறப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்ட போது , அதற்கு அவர் கிராமத்தை சுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளன. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என கூறினார். அதன்படி சருபுஜ்ஜிலி கிராம மக்கள் பேய்களை விரட்ட பூஜை செய்து வருகின்றனர்.
இதனால் 2 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். நாளை இந்த சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த தகவல் அறிந்து கிராமத்திற்கு சென்ற போலீசார் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து பூஜை நடத்தி வருகின்றனர். மேலேயும் கிராமத்தில் பல ஆண்டுகளாக அமாவாசை சிறப்பு பூஜை நடத்தப்பட்டதால், மக்கள் நலமாக இருந்தனர். சில ஆண்டுகளாக பூஜை நடக்கவில்லை. இதனால் கிராமத் தலைவர் உட்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர். கொரோனாவை விரட்ட நாட்டில் ஊரடங்கு அமலானது போல், ஆவிகளை ஒழிக்க ஊரடங்கு பிறப்பித்துள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.