தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

பிரிட்டன் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளது.

அதிரடி அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த நிலையில் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

6 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வு – யூனிட்டுக்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு!

இந்த நிகழ்ச்சியில், சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு சுகாதார அறிவிப்புகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல இடங்களில் மருத்துவர்கள் குறைபாடு இல்லை. கொரோனா காலத்தில் மினி கிளினிக் மருத்துவர்கள் மாற்று பணி கொடுக்க விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வெளியீடு!

மேலும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்காக பயப்பட வேண்டாம். தற்போது தடுப்பூசியை பொறுத்தவரை 92 % முதல் தவணையும், இரண்டாம் தவணை 76% போடப்பட்டு உள்ளது. மேலும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இதற்காக ஏராளமான மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டும் மக்கள் குறைந்த அளவே தடுப்பூசி போடுகின்றனர். இதை அடுத்து இன்னும் 3 அல்லது 4 வாரங்கள் பொறுத்து வேறு வழிகளில் தடுப்பூசி போடுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here